1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா சின்னம்மா

தாய் மடியில் : 17, Mar 1939 — இறைவன் அடியில் : 18, Mar 2020வெளியிட்ட நாள் : 20, Mar 2021
பிறந்த இடம் - கொடிகாமம்
வாழ்ந்த இடம் - யாழ். கச்சாய் பாலாவி கொடிகாமம்
யாழ். கச்சாய் பாலாவி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா சின்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பினை பாலோடு கலந்தூட்டி
எங்களை ஆளாக்கி விட்டவள்
இன்னமுதம் தந்து
தினம் இமை போல் காத்தவள்!
ஈவிரக்கம் கொண்டு உள்ளத்தில்
கருணையின் ஊற்றாய் நிறைந்தவளின்
நினைவகலா ஓராண்டு நினைவு நாள்!எண்ணும் எழுத்துமாய்
எம் கண்ணிரெண்டில் இருப்பவள்
ஏற்றம் தரும் வாழ்விற்கு
ஏணியாய் நின்றவள்!
ஐயம் இட்டு
அனைவரையும் ஆதரித்து,
ஐயமகல அறிவுரை சொல்லிய
எங்கள் ஆருயிர் அம்மாவின்
நினைவகலா ஓராண்டு நினைவு நாள்!அன்னவளின் ஆத்மா
தெய்வத்தின் திருவடியில்
இரண்டறக் கலந்து
சாந்தி பெற
கைகூப்பித் தொழுகின்றோம்! உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்தகவல்: குடும்பத்தினர்