1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாணிக்கம் கணேசலிங்கம்

வெளியிட்ட நாள் : 20, Nov 2021
பிறந்த இடம் - யாழ். குரும்பசிட்டி
வாழ்ந்த இடம் - யாழ். திருநெல்வேலி
யாழ். குரும்பசிட்டி பிறப்பிடமாகவும், திருநெல்வேலி வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கணேசலிங்கம் (ஆச்சாரியர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை ஆண்டொன்று ஆகியென்ன,
அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்JaffnaZone.com